வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு திட்டம்: அச்சத்தில் ஜப்பான்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

தேசிய நிறுவன நாளை முன்னிட்டு வடகொரியா மீண்டும் அணுகுண்டு அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடலாம் என ஜப்பான் அச்சம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அண்மையில் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது.

அத்துடன் ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நிலையில், நாளை அந்நாட்டின் தேசிய நிறுவன நாள் கொண்டாடப்படவுள்ளதால் மீண்டும் அணுகுண்டு அல்லது ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபடலாம் என ஜப்பான் கணித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த தேசிய நிறுவன நாள் கொண்டாட்டத்தின்போது ஐந்தாவது முறையாக வடகொரியா அணுகுண்டு சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்