பிரித்தானிய பெண் ஜிகாதிகள் மிகவும் கொடூரமானவர்கள்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஐ.எஸ் அமைப்பில் உள்ள பிரித்தானிய பெண் ஜிகாதிகள் மிகவும் கொடூரமானவர்கள் என அந்த அமைப்பில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜிகாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Hajer என மட்டும் அறியப்படும் குறித்த பெண் ஜிகாதி இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பெண் ஜிகாதிகள் மிகவும் கொடூரமானவர்கள் எனவும், வக்கிர குணத்துடன் சித்திரவதைக்கு உட்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தங்களது பிணைக்கைதிகளை சித்திரவதை செய்வதற்காக பிரித்தானிய பெண் ஜிகாதிகள் biter எனப்படும் ஒருவகை ஆயுதத்தை பயன்படுத்துயதாகவும், இது தரும் வலியானது பெண்களுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் வலியைவிடவும் மிகவும் கொடூரமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பானது பெண் ஜிகாதிகளுக்காக Al-Khansaa எனப்படும் குழு ஒன்றை கடந்த 2014 ஆம் ஆண்டு துவக்கியது. குறித்த குழுவில் முதன்முதலில் தெரிவான பெண்களில் 25 வயதாகும் Hajer என்பவரும் ஒருத்தர்.

ஐ.எஸ் அமைப்பு மட்டுமே பெண்களை போராட்ட களத்தில் அனுப்புவதும் அவர்களின் திறமைக்கு தகுந்த பதவி வழங்குவதும் கொள்கையாக செயல்படுத்தி வந்தது எனவும், அதனால் மட்டுமே தாம் அந்த குழுவில் இணைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவில் இணைந்த பின்னரே பிரித்தானியர்களான Shamima Begum, Amira Abase மற்றும் Kadiza Sultana ஆகிய பள்ளி மாணவர்களுடன் இணைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.எஸ் அமைப்பின் கொள்களை மீறுபவர்களை தண்டிக்கும் உரிமை Al-Khansaa குழுவினருக்கு அளிக்கப்பட்டிருந்ததால், குறித்த குழு உறுப்பினர்கள் தண்டனை என்ற பெயரில் கொடூர சித்திரவதைகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும்,

சிரியா இளம் பெண்களை கொடூரமாக சித்திரவதை செய்தது தமக்கு மிகவும் பிடித்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது பார்வையில் ஐரோப்பியர்களே மிகவும் கொடூரமானவர்கள் எனக் கூறும் அவர், குறித்த குழுவில் செயல்பட்டு வந்த Um Salama என்ற பிரித்தானியர் கொடூரமான சித்திரவதைகளை மேற்கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி ஜோர்டான் ராணுவ வீரரை சித்திரவதை செய்து படுகொலை செய்த காட்சிகள் இன்றளவும் தமக்கு மறக்க முடியாத நிகழ்வு எனவும் அவர் குறித்த செய்தி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்