வெளிநாட்டில் உணவின்றி தவிக்கும் தமிழர்களின் உருக்கமான கோரிக்கை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஓமன் நாட்டுக்கு வேலைக்காக சென்ற 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் நாடு திரும்ப உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி, திருச்சி, அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நபர்கள், ஸ்கைலார்க் என்ற முகவர் மூலம் 8 மாதங்களுக்கு முன்பு ஓமனுக்கு வேலைக்கு சென்றனர்.

advertisement

அங்குள்ள அல்குவைர் பகுதியில் உள்ள அல்ஃபார்சி என்ற நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், உணவின்றி தவிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு உரிய வேலை கொடுக்கப்படாமல் கடினமான வேலைகள் செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதோடு ஓமனில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்தபோது, அவர்கள் நிறுவனத்திற்கு ஆதரவாகவே பேசியதாகவும், உடனடியாக தங்களை மீட்க உதவுமாறும் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்