கத்தாருடன் பேச்சுவார்த்தை எதுவும் கிடையாது: சவுதி அரேபியா

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

கத்தாருடன் இனிமேல் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என சவுதி அரேபியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய இளவரசர் முகமத் பின் சல்மான், கத்தார் தலைவர் ஷேக் தமிம் அல் தனியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து சவுதி அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சவுதி மற்றும் கத்தார் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பில் கத்தார் சார்பில் அரேபிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் கத்தார் உண்மைகளை திரித்துக் கூறுவதால் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த இடமில்லை என கூறப்பட்டுள்ளது.

ஆனால் கத்தார் தரப்பில் இந்த உரையாடல் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கத்தார் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்