கண் இமைக்கும் நேரத்தில் பிணமான இளைஞர்! வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள்: சிசிடிவி காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ஈராக்கில் இளைஞர் ஒரு கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் விழுந்து பிணமான சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிசிடிவி வீடியோவில், சாலையில் வரும் காருக்கு அருகே நடந்து வரும் இளைஞர் ஒருவர், காருக்குள் இருக்கும் நண்பரிடம் குனிந்து கண்ணாடி வழியாக பேசிக்கொண்டிருக்கிறார்.

advertisement

இதன்போது, ஏதோ வானத்திலிருந்து அந்த இளைஞரின் தலை உச்சியில் பாய, இதில் சாலையில் சரிந்த இளைஞர் எந்தவித அசைவில்லாமல் கிடக்கிறார்.

இதை கண்டு அதிர்ச்சிடைந்த அங்கிருந்த மக்கள் ஓடி வந்து இளைஞரை தூக்கி நண்பரின் காருக்குள் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், இளைஞர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக இளைஞரை சோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கில் கொண்டாட்டத்தின் ஒரு அறிகுறியாக வானத்தை நோக்கி தூப்பாக்கியால் சுடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்