7360 கிலோ எடையுடன் தயாரான பிரம்மாண்ட புலாவ் உணவு: வைரல் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

புலாவ் உணவு வகையானது உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தேசிய உணவான புலாவை பிரம்மாண்ட முறையில் தயாரிக்க அந்நாட்டின் சமையல் கலைஞர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, இரண்டாயிரம் கிலோ இறைச்சியும் மூவாயிரம் கிலோ காய்கறிகளும் சேர்க்கப்பட்டு புலாவ் சமைக்கப்பட்டது.

50 சமையற்கலை நிபுணர்களின் 6 மணிநேர கடின உழைப்பில் உருவான இந்த புலாவ், ஏழாயிரத்து 360 கிலோ எடையுடன் உலகின் மிகப்பெரிய புலாவ் என கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே உஸ்பெகிஸ்தான் புலாவ் உணவுக்கு சிறந்த கலாச்சார உணவு என்ற அங்கீகாரம் கடந்தாண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்