பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்க அரசு திட்டம்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் கார்களை உற்பத்தி செய்வதில் சீனா முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

கடந்தாண்டில் மட்டும் 28 மில்லியன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படத்துள்ளது.

மேலும், எண்ணெய் வளங்களை அதிகளவில் பயன்படுத்துவதில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை பயபடுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் இதுபோன்ற கார்கள் மற்றும் வேன்களை உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

எனினும், தடை செய்யப்படும் ஆண்டு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

மேலும், இந்த வாகனங்களுக்கு பதிலாக மாற்று எற்பாடுகளாக மின்சார கேபிள் கார்களை உற்பத்தி செய்ய சீனா தீர்மானித்து வருகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூரவ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் 2040-ம் ஆண்டிற்குள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை முற்றிலுமாக தடை செய்ய ஏற்கவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்