சிறுமியின் வாயில் மதுவை வலுக்கட்டாயமாக ஊற்றிய பெற்றோர்: அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியும், சிகரெட்டை புகைக்கவும் வைத்த பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அர்ஜென்டீனாவில் உள்ள ஒரு வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அதில், உட்கார்ந்துள்ள சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக அவரின் பெற்றோர் மதுவை ஊற்றுவதோடு, கஞ்சா கலந்த சிகரெட்டை வாயில் நுழைத்து புகைக்க வைக்கின்றனர்.

இதையடுத்து போதை மயக்கத்தில் தள்ளாடும் சிறுமி கீழே சாயும் நிலையில் அவரின் தாய் தாங்கி பிடிப்பது போல வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து குறித்த சிறுமியின் தந்தை மற்றும் தாயை பொலிசார் கைது செய்தனர்.

வீடியோவை விளையாட்டுக்காக தான் பதிவு செய்தோம் எனவும் குழந்தைக்கு மதுவை நாங்கள் தரவேயில்லை எனவும் சிறுமியின் பெற்றோர் பொலிசிடம் கூறியுள்ளனர்.

சிறுமியின் தாய்க்கு 17 வயதாகும் நிலையில், மைனரான அவர் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்