ஒரே இரவில் பிரபலமான பாகிஸ்தான் பெண்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி யார் என்ற கேட்டு ஒரே இரவில் பிரபலமாகியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த பெண்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி ஆசிரியர் தினத்தையொட்டி டுவிட்டரில் ஒரு படத்தை வெளியிட்டார்.

அதில், சுவற்றில் கிரிக்கெட் பிரபலங்களின் பெயர்கள் உள்ளன, அதற்கு பக்கத்தில் கோஹ்லி உட்கார்ந்துள்ளார்.

சுவற்றின் அடியில், எப்படி இருக்க வேண்டும் என்று காட்டியதற்கு நன்றி என்று விராட் கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர், டோனி , பாகி்ஸ்தான் முன்னாள் வீரர்கள் இம்ரான் கான், ஜாவித் மியான்தத், இன்சமாம் உல் ஹக் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த டுவிட், 8688 பேர் ரிடுவிட் செய்துள்ளனர், 61,631 பேர் லைக் செய்துள்ளனர். 2392 பேர் தங்களுடைய கருத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த சையதா அலியா என்ற பெண், இந்த புகைப்படத்தில் உள்ளவர் யார் என்று கேட்டு தனது நண்பர் மற்றும் விராட் கோஹ்லிக்கு Tag செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்து சையதாவின் நண்பர், இவர் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர், சிறந்த பேட்ஸ்மேன் என பதிலளித்துள்ளார்.

விராட் கோஹ்லி பதிவு செய்த டுவிட்டை விட, இப்பெண் போட்ட டுவிட் தான் தற்போது வைரலாகியுள்ளது.

இவரது டுவிட் பாகிஸ்தானில் வைரலாகிவருகிறது, இந்நிலையில், சாதாரண விசாரணை டிவீட் இந்த அளவுக்கு வைரலாகும் என்றும் தான் ஓவர்நைட்டில் நட்சத்திரமாவேன் என்றும் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று சையதா மற்றொரு டுவிட்டையும் போட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்