சுற்றுலா சென்ற 3 இளம்பெண்கள் கற்பழிப்பு: குற்றவாளிகளுக்கு பொலிஸ் வலைவீச்சு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்ற 3 இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளிகளை அந்நாட்டு பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள தீவுப்பகுதியான Majorca என்ற கடற்கரையில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் இந்த மூன்று கற்பழிப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

மூன்று பெண்களும் பிரித்தானியா(21), சுவீடன்(20) மற்றும் ஜேர்மனி(30) ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.

இதுக் குறித்து ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் பேசுகையில், ‘மது விடுதி ஒன்றில் நபருடன் மது அருந்தினேன். ஆனால், அங்கிருந்து திரும்ப வெளியே வந்த நினைவு இல்லை.

மறுநாள் காலையில் கடற்கரையில் படுத்திருந்ததை உணர்ந்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரை தொடர்ந்து மூன்று பெண்களும் மது அருந்திய நிலையில் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

கடந்த மாதம் இதே தீவுப்பகுதிக்கு சுற்றுலா வந்த ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த 19 என்ற இளம்பெண் மர்மமான முறையில் கற்பழிக்கப்பட்டார்.

சுற்றுலா வரும் வெளிநாட்டு இளம்பெண்கள் தொடர்ச்சியாக கற்பழிப்பிற்கு உள்ளாகி வரும் நிலையில் குற்றவாளிகளை ஸ்பெயின் நாட்டு பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்