இறந்த உறவினர்களுடன் இளம்பெண்களின் செல்பி: இந்தோனேஷியாவில் விநோத விழா

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தோனேஷியாவில் பழங்குடியின மக்கள் இறந்த உறவினர்களின் உடல்களுடன் செல்பி எடுத்து கொண்டாடப்படும் விநோத விழா களைகட்டியுள்ளது.

மிகுதியான அறுவடை வேண்டி இந்தோனேஷியா பழங்குடியின மக்களால் கொண்டாடப்படும் விநோத விழா Ma'nene என அறியப்படுகிறது.

இந்த விழாவிற்காக இறந்து புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுத்து சிறப்பாக அலங்கரித்து கொண்டாடுகின்றனர். இந்த கொண்டாட்டமானது 3 நாட்கள் வரை நீடிக்கும்.

முதலில் கல்லறைகளை தோண்டியெடுத்து உறவினர்களை அடக்கம் செய்த பெட்டியை வெளியே எடுத்து பூத உடல்களை காய்ந்து போகும் அளவுக்கு பாதுகாக்கின்றனர்.

பின்னர் அந்த உடல்களை தண்ணீரால் சுத்தப்படுத்தி வண்ணமயமான ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கின்றனர்.

இதனையடுத்து குறித்த கிராமத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று விழாவை சிறப்பிக்கின்றனர். இதில் குறித்த உறவினர்களின் அலங்கரித்த உடல்களுடன் செல்பி எடுத்து இளம்பெண்கள் கொண்டாடுகின்றனர்.

ஆனால் இந்த விழாவின்போது எவரும் கண்ணீர் விடக்கூடாது என்பது சட்டமாக வைத்துள்ளனர். இதனால் முகம் மலர அனைவரும் சிரித்தவாறே ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர்.

குறித்த செயல் தங்களது இறந்த உறவினர்களை மதிப்பதாகும் என கூறும் கிராம மக்கள், இது மகிழ்ச்சியான தருணம், இறந்த தங்களின் உறவினர்களுடன் மீண்டும் இணைவது போன்றது என்கின்றனர்.

விழாவின் மூன்றாவது நாள் எருமை மற்றும் பன்றிகளை பலியாக தந்து தங்களின் உறவினர்களை வழியனுப்பி வைக்கின்றனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தங்கள் அறுவடை பொய்த்துப் போனதால், தங்கள் முன்னோர்களின் சாபம் எனக் கருதி, தங்கள் உறவினர்களின் உடல்களை தோண்டி எடுத்து விழா எடுத்துள்ளனர்.

அதன் பின்னர் செழிப்பான அறுவடை இருந்ததாக கூறுகின்றனர். தற்போது வரை ஆண்டு தோறும் இந்த விநோத விழாவினை சிறப்பாக கொண்டாடி தங்களின் நம்பிக்கையை பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்