போருக்கு ஆயத்தமாகிறதா வடகொரியா? வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் ஆயத்த நிலையில் இருக்கவும் வடகொரியா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வடகொரிய அரசின் இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆனால் எவ்வித எச்சரிக்கை நடவடிக்கையும் இதுவரை அரசால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் வடகொரியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்கையில், அந்த நாடு தற்போது போருக்கு முந்தைய quasi-war எனப்படும் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

quasi-war status எனப்படுவது போருக்கு முந்தைய நிலை என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து. இது பொதுமக்கள் போருக்கு தயாராவதற்காக அளிக்கப்படும் மிக குறுகிய கால அவகாசம்.

மட்டுமின்றி பாதுகாப்பு நடவடிக்கைகள், அணுஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதில் இருந்து தப்பித்து பதுங்குவதற்கான ஏற்பாடுகள் என அனைத்தையும் இந்த குறுகிய கால அவகாசத்தில் பொதுமக்கள் செய்து முடிக்க வெண்டும்.

குறித்த அவசரகால நிலையை கிம் ஜோங் அறிவித்து ஒரு வார காலம் கடந்துள்ளது. இதுவரை அதன் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்க அரசு தாமதித்து வருவதால் பொதுமக்களிடையே குழப்பம் நிலவுகின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சியோலில் இருந்து வெளியாகும் நாளேடு ஒன்று, அரசின் அவசர கால அறிவிப்பு வெளியாகி ஒரு வார காலம் கடந்துள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு போதுமான பயிற்சிகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.

இருப்பினும் எச்சரிக்கையுடன் இருக்கவே பொதுமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்