வங்கதேசத்தில் தஞ்சமடைந்த 3.13 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை 3.13 லட்சமாக அதிகரித்துள்ளது என ஐ.நா சபை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா அகதிகள் நல ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோசப் திரிபுரா கூறியதாவது, மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் குறைந்துள்ளது.

வங்கதேசத்தில் அகதிகள் தங்க இடமில்லாததால் தெருவோரங்களில் தங்கியுள்ளனர்.

சமீபத்திய வன்முறை நிகழ்வுகளுக்கு பின்னர் வங்கதேசம் வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 3.13 லட்சமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே புதிதாக வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு தற்காலிக முகாம் அமைப்பதற்காக நிலம் ஒதுக்கீடு செய்ய வங்கதேசம் ஒப்புதல் அளித்துள்ளது.

அங்கே தற்காலிக கூடாரங்கள் அமைத்தபின்னர் அகதிகள் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், விபரங்களை பதிந்த பின்னர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் எனவும் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் முகமது ஷெரியார் ஆலம் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்