15 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் பஞ்சாயத்து வழங்கிய கொடூர தண்டனை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பாகிஸ்தானில் வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் கவுரவ கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கராச்சி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும், 17 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர்.

advertisement

இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததையடுத்து, இவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளனர்.

ஆனால், தங்களது காதலை தொடர்ந்து வந்த இவர்கள், ஒருநாள் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து காதல் ஜோடியை கண்டுபிடித்துள்ளனர், அதன் பின்னர் காதல் ஜோடி பஞ்சாயத்து முன்னிலையில் நிற்கவைக்கப்பட்டனர்.

வீட்டை விட்டு ஓடியது எங்கள் சமூகத்திற்கு பெரிய அவமானம் என்று கூறி இவர்கள் இருவரையும் கவுரவ கொலை செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, முதலில் அச்சிறுமியை கயிறால் கட்டி உடலில் மின்சாரம் பாய்த்து கொன்று புதைத்தனர். அதற்கு அடுத்த நாள் அதே கயிறால் காதலனையும் கட்டி மின்சாரம் பாய்த்து கொன்று புதைத்துள்ளனர்.

பாகிஸ்தானில் கவுரவ கொலை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதில் அதிகமாக பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்