நடுவானில் மயங்கிய பயணிகள்! நடந்தது என்ன?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பாகிஸ்தானுக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் குளிர்சாதன பெட்டி செயல்படாததால் பயணிகள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் மதினா நகரிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு SV-706 என்ற விமானம் கடந்த 9ம் திகதி புறப்பட்டது.

advertisement

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குளிர்சாதன பெட்டி செயல்படாமல் போனதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் வயதானவர்கள் மயங்கி விழுந்தனர்.

கடும் சிரமங்களுக்கு பின்னர் மூன்று மணிநேரம் தாமதமாக விமானம் தரையிரக்கப்பட்டது.

இச்சம்பவத்தின் போது பயணி ஒருவர் எடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்