வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி: ஆயத்தமாகும் தென் கொரியா

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவது தென் கொரிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவை நம்பி மட்டும் பயனில்லை என்ற கருத்து தென் கொரியா மக்களிடம் நிலவுகிறது.

சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் கூட, 78 சதவிகித தென் கொரிய மக்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விரைவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை விரைவில் சோதித்து பார்க்கவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

இதனையடுத்து தென் கொரியாவின் போர்க் கப்பல்கள் வடகொரியா எல்லைக்கு அருகே குவிக்கப்பட்டு வருகின்றன.

உலக நாடுகளுக்கு தெரியாமல் ஹைட்ரஜன் குண்டுகளை தென் கொரியா தயாரிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

என்னதான் தயாரான நிலையில் இருந்தாலும், வடகொரியாவின் எதிர்பாராத தாக்குதல்களை நினைத்து தென் கொரியா மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்