ஆப்கான் குண்டுவெடிப்பு: பாதிப்பின்றி நாடு திரும்பினர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

Report Print Jeslin Jeslin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு அருகில் இருந்த சோதனைச் சாவடியில் நேற்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த மைதானத்தில் இடம்பெறவிருந்த போட்டியொன்றுக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான சனத் ஜயசூரிய, பர்விஸ் மஹரூப், அஷான் பிரியஞ்சன மற்றும் போட்டி நடுவர் கிரகம் லெப்ரோய் ஆகியோர் சென்றுள்ளனர்.

advertisement

எனினும், சம்பவம் இடம்பெற்றவேளை, அவர்கள் குறித்த விளையாட்டு மைதானத்தில் இருக்கவில்லை எனவும், அதனால் அவர்களுக்கு பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று அதிகாலை சனத் ஜயசூரிய மற்றும் மஹரூப் ஆகியோர் போட்டிகளை இரத்துச் செய்து விட்டு நாடு திரும்பியுள்ளனர்.

எனினும், அஷான் பிரியஞ்சன மற்றும் கிரகம் லெப்ரோய் ஆகியோர் போட்டிகளில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குண்டுத்தாக்குதலின்போது இருவர் உயிரிழந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்