புர்காவை நீக்க மறுத்த இஸ்லாமிய பெண்: தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பிய பொலிஸ்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பெல்ஜியம் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் புர்காவை நீக்க மறுத்த இஸ்லாமிய பெண் ஒருவர் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டென்மார்க் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் துனிசியா நாட்டிற்கு சென்றுள்ளார்.

advertisement

துனிசியா நாட்டில் இருந்து பெல்ஜியம் நாட்டிற்கு பயணமாகியுள்ளார். துனிசியாவில் புறப்படுவதற்கு முன்னர் புர்காவை நீக்க மறுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெல்ஜியம் நாட்டு விமான நிலையத்தை அடைந்தபோது சில அடையாளங்களுக்காக அவரது முகத்திரையை நீக்க வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இஸ்லாமிய பெண் முகத்திரையை நீக்க மறுத்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் பெல்ஜியம் நாட்டில் புர்கா அணிவதற்கு தடை உள்ளது.

இச்சட்டத்தின் அடிப்படையில் விதிமுறைகளை பின்பற்றாத இஸ்லாமிய பெண்ணை விமான நிலைய பொலிசார் துனிசியா நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இத்தகவலை பெல்ஜியம் குடியமர்வு துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

’பெல்ஜியம் நாட்டில் புர்கா அணிவதற்கு தடை உள்ளதாலும், சட்டத்தை பின்பற்றாத அப்பெண்ணை திருப்பி அனுப்பி விட்டதாக’ தெரிவித்துள்ளார்.

இத்தகவலை டென்மார்க் நாட்டு குடியமர்வு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பெல்ஜியம் குடியமர்வு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்