விமானநிலையத்தில் பற்றி எரியும் விமானம்: தப்பிக்க முயன்ற ஒருவர் காயம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

ஹாங்காங் விமானநிலையத்தில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பின்புறம் தீப்பற்றி எரிந்ததில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாங்காங் விமானநிலையத்தில் இருந்து லாஸ்வேகாஸ் பகுதிக்கு போயிங் 777 என்ற அமெரிக்க ஏர்லைன்ஸ் விமனம் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு புறப்பட தயாராக இருந்துள்ளது. அப்போது விமானத்தின் இடது பக்கத்தின் பின் புறத்தில் திடீரென்று தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்ததுடன், பயணிகள் மற்றும் விமானிகளை பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியுள்ளன.

இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த ஒருவர் தப்பிக்க முயன்ற போது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்ற படி எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இதற்கு அடுத்து செல்லவிருந்த AA192 என்ற விமானத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 6.35 மணிக்கு புறப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க ஏர்லைன்ஸ் சார்பில் தெரிவிக்கையில், தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக தீப்பற்றி எரிந்துவிட்டதாகவும், இதனால் பயணிகள் மற்றும் விமானிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் விமானத்தில் லக்கேஜ் ஏற்றும் நபருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்