இனவெறியை தூண்டும் விளம்பரம்: மன்னிப்பு கோரிய பிரபல நிறுவனம்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சர்வதேச அளவில் பிரபலமான டவ் அழகு சாதன நிறுவனம் இனவெறியை தூண்டும் விதத்தில் விளம்பரம் ஒளிப்பரப்பியதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யுனிலீவர் நிறுவன உலகம் முழுவதும் டவ்(Dove) சோப்புக்கட்டியை விற்பனை செய்து வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் இந்த சோப்புக்கட்டி தொடர்பாக சமீபத்த்தில் விளம்பரம் ஒன்று ஒளிப்பரப்பபட்டது.

அதில், ‘கருப்பின பெண் ஒருவர் தனது மேலாடையை நீக்குவது போலவும், அவர் ஆடையை நீக்கிய உடனே வெள்ளை நிறத்தில் இளம்பெண் தோன்றுவது போலவும் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் கருப்பின பெண்களை மிகவும் அவமதிப்பதாகவும், இனவெறியை தூண்டும் விதத்திலும் இருப்பதாக கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த விமர்சனங்களை தொடர்ந்து யுனிலீவர் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய அந்த விளம்பரம் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்