மீன் உணவு பரிமாறியதால் ஆத்திரம்: பெண்ணை கற்பழித்து கொலை செய்த கும்பல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெண் ஒருவர் மீன் உணவு பரிமாறியதாக கூறி கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று அவரை பலாத்காரம் செய்து பின்னர் தலையை துண்டித்து கொலை செய்துள்ளது.

காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக சண்டைகள் நடைபெற்று வருகிறது.

இதில் கிளர்ச்சியாளர்கள் குழுவான Kamuina Nsapu அப்பாவி பெண் ஒருவரை தடை செய்யப்பட்ட உணவு பரிமாறியதாக கூறி பொதுமக்கள் முன்னிலையில் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, பின்னர் அவரது தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றியுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று குறித்த பெண்மணி நடத்தி வரும் உணவு விடுதியில் போராளி குழுவினர் சிலர் உணவு அருந்த சென்றுள்ளனர்.

அவர்களுக்கு அந்த பெண்மணி மீன் உணவு பரிமாறியதாக கூறப்படுகிறது. போராளிகள் சண்டையிட்டுவரும் நிலையில் குறிப்பிட்ட சில உணவுகளை அப்பகுதியில் தடை செய்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த போராளி ஒருவர் தங்களது தடையை மீறி மீன் உணவு சமைத்து பரிமாறியது தேசத் துரோகம் எனக் கூறி குறித்த பெண்மணியை தாக்கி, பொது வீதிக்கு இழுத்து சென்றுள்ளார்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் குறித்த பெண்மணியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனையடுத்தும் ஆத்திரம் தீராத போராளிகள், அவரது தலையை துண்டித்து, ரத்தத்தை குடித்துள்ளனர்.

போருக்கு செல்லும் முன் உயிர்ப்பலி அளிக்கும் சடங்காகவே இதை அவர்கள் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி சம்பவத்தன்று உணவு விடுதியில் குறித்த பெண்மணியுடன் உதவிக்கு நின்றிருந்த அவரது மகனையும் குறித்த கும்பல் மரண தண்டனை விதிப்பதாக கூறி கொலை செய்துள்ளது.

இதனிடையே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரது உடல்களும் சம்பவம் நடந்த அதே பகுதியில் இரு தினங்கள் கிடந்தது எனவும், செஞ்சிலுவை அமைப்பினர் சேர்ந்து அந்த உடல்களை கைப்பற்றி அடக்கம் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்