சுறா மீனை காப்பாற்றிய வீரப்பெண்: வைரலாகும் வீடியோ

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் சிக்கிய சுறா மீனை காப்பாற்றி கடலில் விடும் காட்சி வைரலாகியுள்ளது.

சிட்னியில் உள்ள நீச்சல் குளத்தில் மெலிசா ஹத்ஹையரா என்பவர் நீந்திக் கொண்டிருந்தார்.

advertisement

அப்போது மீனின் வால் போன்று ஏதோ ஒன்று தென்பட மகளை அழைத்துள்ளார், அவர் உற்றுநோக்கிய போது சுறாமீன் ஒன்று சிக்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக பதட்டமில்லாமல் சுறாமீனை மீட்டு மீண்டும் கடலில் விட்டுள்ளார்.

சிசிடிவி கமெராக்களில் பதிவான இந்த காட்சிகள் வைரலாகியுள்ளதுடன், பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

காப்பாற்றதாக கூறப்படும் சுறா Port Jackson Shark வகையாக இருக்கலாம் என்றும், மனிதனுக்கு எந்தவித தீங்கும் அளிக்காதவை எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்