பெற்ற பிள்ளையை வளர்ப்பதற்காக பள்ளிப்படிப்பை நிறுத்திய 13 வயது சிறுமி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனக்கு பிறந்த குழந்தையை பராமரிப்பதற்காக 13 வயது சிறுமி பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார்.

ராய்கட் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை அண்டை வீட்டாரான 55 வயது நபர் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

advertisement

இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். அவர் கர்ப்பமடைந்தது அவருக்கு தெரியாத நிலையில், ஒரு முறை மயங்கி விழுந்தபோது மருத்துவமனைக்கு கொண்டு சோதனை செய்ததில் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

6 மாதம் ஆகிவிட்டதால் கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். தனது மகளுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்காவது தெரிய வந்தால், மகளை திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரமாட்டார்கள் என பெற்றோர் கவலையடைந்தனர்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமிக்கு 1.5 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையை யாருக்காவது தத்து கொடுக்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்தினர், ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடைபெற்ற பின்னர், எனது மகளை யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள், எனவே இக்குழந்தை வளர்ந்து எனது மகளை கவனித்துக்கொள்ளட்டும் என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது இக்குழந்தையால் மாணவியின் படிப்பும் தடைபட்டுள்ளது, குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதால் தனது பள்ளிப்படிப்பை மாணவி நிறுத்தியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்