காவலர் பயிற்சிக் கல்லூரி மீது தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல்: 71 பேர் பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்கானிஸ்தானில் காவலர் பயிற்சிக் கல்லூரி மீது தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி ஆகியவற்றால் தாக்குதல் நடத்தியதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த கொடூர தாக்குதலில் இருநூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத் தலைநகர் கார்டசில் காவல்துறைத் தலைமையகத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாகச் சுட்டனர்.

அப்போது வளாகத்துக்கு அருகில் இரண்டு கார்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையும் நடந்தது. தற்கொலைப்படைத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் 71 பேர் உயிரிழந்தனர். இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்