ஈராக்கை அடுத்து ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் ஈரான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சில மணி நேரமே ஆன நிலையில் ஜப்பானில் ரிக்டர் அளவில் 5.8 என பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் 6.1 என கணக்கிடப்பட்ட இந்த நிலநடுக்கமானது பின்னர் 5.8 என குறைக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மட்டுமின்றி நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை.

ஜப்பானில் கடந்த மாதம் இதே அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உலுக்கியிருந்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 9.1 என தாக்கிய நிலநடுக்கத்தில் சிக்கி 15,894 பேர் கொல்லப்பட்டதுடன் 10 மீற்றர் உயரத்தில் சுனாமி அலைகளும் எழுந்து தாக்கின.

இது ஜப்பானின் 4 முக்கிய அணு உலைகளையும் சேதப்படுத்தியதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்