தவறி கீழே விழுந்த ஜப்பான் பிரதமர்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 12 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக ஆசிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதன் முதல் பயணமாக ஜப்பான் நாட்டிற்குச் சென்று, அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே வை சந்தித்தார்.

ஜப்பானில் அமெரிக்க ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ, ட்ரம்புக்கு தொப்பி ஒன்றை பரிசாக கொடுத்தார். இதனையடுத்து அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சூ அபேவை சந்தித்த பிறகு, இருவரும் கோல்ஃப் விளையாடினர்.

டொனால்ட் டிரம்ப் கோல்ஃப் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர், இதனால் ஜப்பான் பிரதமரும் அவருடன் இணைந்து கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட்டார்.

அப்போது, ஜப்பான் பிரதமர் ஷின்சூ நிலைதடுமாறி கீழே விழுந்து உருண்டுள்ளார், யாரும் வந்து உதவி செய்வதற்கு முன்னரே, தர்மசங்கடமான சூழ்நிலையில் அவரே சமாளித்துக்கொண்டு உடனே எழுந்துவிட்டார்.

இந்த சம்பவத்தை டொனால்ட் டிரம்ப்பும் கவனிக்கவில்லை, இதனை ஜப்பான் ஊடகம் ஒன்று வெளியிட்டதையடுத்து தற்போது இந்த வீடியோ அந்நாட்டில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்