2 வயது குழந்தை போல் இருக்கும் 30 வயது நபர்: நெஞ்சை உருக்கும் தாயின் கண்ணீர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவில் 30 வயது நபர் ஒருவர் இரண்டு வயதில் இருந்து வளர்ச்சி இல்லாமல் அரிய வகை நோயின் காரணமாக அவதிப்பட்டு வருவதைக் கண்டு அவரது தாய் இந்த நிலைமை எப்போது மாறும் என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

சீனாவின் Anhuiமாகாணத்தில் உள்ள Yuexi கிராமத்தைச் சேர்ந்தவர் Chu Xiaoping(52). இவருக்கு கடந்த 1987-ஆம் ஆண்டு Wang Tianfang என்ற குழந்தை பிறந்துள்ளது.

நன்றாக வளந்து வந்த அக்குழந்தை, இரண்டு வயதிற்கு பின்னர் வளர்ச்சி அடையவில்லை, தற்போது அவருக்கு 30 வயது அடைந்த பின்னரும், தற்போது 2 வயது குழந்தை போன்று தான் உள்ளார். அதாவது 2 அடி 7 அங்குலம் தான் உள்ளார்.

அவரது தாயார் கூறுகையில், இரண்டு வயதில் இருந்தே அவனுடைய வளர்ச்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை, பேச்சும் அந்த அளவிற்கு இல்லை.

இதனால் மிகுந்த மன வருத்தில் இருந்தேன், அப்போது தன் உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் இவனை கோவிலிலோ அல்லது ஏதேனும் சாலைகளிலோ விட்டு விட்டு வந்துவிடு, வேறு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினர்.

ஆனால் தனக்கு மனம் வரவில்லை, தான் இங்கு மலைகளில் தேயிலை பறிக்கும் வேலை பார்த்து வருகிறேன், அதுமட்டுமின்றி சலவை தொழிலும் செய்து வருகிறேன்.

இவனுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையின் காரணமாக மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றாலும், இது ஏதோ ஒரு அரிய வகை நோய் எனவும், இவ்வளவு காலம் இவன் வாழ்ந்ததே பெரிய விடயம் என்று கூறுகின்றனர்.

ஆனால் நான் அவளுடைய ஆயுட்கால நீடிக்க வேண்டும் என்றும், அவன் நீண்ட காலம் வாழவேண்டும் என ஆசைப்படுவதாகவும், இந்த நிலைமை எப்போது தான் மாறுமோ எனவும் கண்ணீர் விட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்