10 மாதங்களில் 28 கிலோ எடை: உலகின் அதிக எடை கொண்ட குழந்தை இதுதான்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

மெக்சிகோவில் மரபணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பத்து மாத குழந்தை, 28 கிலோ எடை கொண்டிருப்பதால் அதன் பெற்றோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாரியோ மற்றும் இசபெல் பண்டோஜா தம்பதியரின் பத்து மாத குழந்தை லூயி மேனுவல்.

இந்த குழந்தை பிறக்கும்போது 3.5 கிலோ எடை இருந்துள்ளது, ஆனால் பத்து மாதங்களில் இந்த குழந்தையின் எடை 28 கிலோவாக கூடியிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவரிடம் குழந்தையை காண்பித்துள்ளனர். லூயியை பரிசோதித்த மருத்துவர், Prader-Willi Syndrome எனும் அரிய வகை மரபியல் குறைபாட்டால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், வாரம் ஒருமுறை மருத்துவமனைக்கு லூயியை கொண்டு சென்று பரிசோதிக்க வேண்டும் எனவும், அதற்கு ஒவ்வொரு முறையும் 35 ஆயிரம் வரை செலவாகும் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

லூயியின் தாய் இசபெல் கூறுகையில், எல்லா குழந்தைகளைப் போலவும் லூயியும் தாய்ப்பால் குடித்துதான் வளர்ந்தான். ஆனால், அவன் மட்டும் எப்படி இவ்வளவு எடை கூடினான் என தெரியவில்லை.

என் கணவரின் மாத வருமானமே 13 ஆயிரம் ரூபாய் தான். நாங்கள் எப்படி வாரத்திற்கு 35 ஆயிரம் செலவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மாரியோ மற்றும் இசபெல் தம்பதி பேஸ்புக் பக்கம் ஒன்றை துவங்கி, அதன் மூலமாக நிதி திரட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்