உடலை துளைத்த 40 குண்டுகள்: உயிரை காக்க ஓடிய வடகொரிய வீரர்: வெளியான வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
1869Shares
1869Shares
lankasrimarket.com

சமீபத்தில் வடகொரியா இராணுவ வீரர் ஒருவர் தனது நாட்டில் இருந்து தப்பித்து தென் கொரியாவுக்கு சென்றபோது தனது சக வீரர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இதில், 40 குண்டுகள் அவரது உடலை துளைத்தன, இருப்பினும் எல்லையை கடந்து தென்கொரியாவுக்கு நுழைந்த அவரை, அந்நாட்டு வீரர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இராணுவ வீரர் சுடப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் ராணுவ வீரர் ஜீப்பில் இருபுறமும் மரங்கள் வரிசையாக உள்ள சாலையில் மிக வேகமாக வந்ததும், வடகொரிய வீரர்கள் அவரை விரட்டியதும், துப்பாக்கிச் சூடு நடத்தியதும் காட்சியாகியுள்ளன.

ஜீப்பில் வந்த அவர் வடகொரிய-தென் கொரிய எல்லையில் ஜீப்பை மோதி நிறுத்தி இறங்கி ஓடினார். இவர் மீது வடகொரிய வீரர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இலைக்குவியல்களுக்கிடையே காயமடைந்த அந்த ராணுவ வீரரை தென் கொரிய ராணுவ வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து தென்கொரிய கலோனல் கரோல் கூறியதாவது, வட கொரியா ஒப்பந்தத்தை மீறி தென்கொரியாவுக்குள் நுழைந்து ஆயுதம் பயன்படுத்தியது சட்டப்படி குற்றமாகும்.

1950-53 கொரியப் போருக்குப் பிறகு சுமார் 30,000 வடகொரியர்கள் சீனா வழியாக தென் கொரியாவுக்குள் வந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்