9 வயது சிறுமியை 5 மாதம் கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

தென் அமெரிக்க நாடான பெருவில் வளர்ப்பு தந்தையால் தொடர் பாலியல் வன்புணர்வுக்கு இரையான 9 வயது சிறுமி தனது 5 மாத கர்ப்பத்தை கலைக்க முடியாமல் சிக்கலில் உள்ளார்.

குறித்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த பின்னரே அவரின் தாயாருக்கு அவர் பாலியல் வன்புணர்வுக்கு இரையானது குறித்து அறிய வந்துள்ளது.

இதனையடுத்து கல்லாவொ பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சிறுமியை அழைத்து சென்ற அவர் தாயார், சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

அதில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இந்த தகவல் தெரிய வந்ததும் சிறுமியின் வளர்ப்பு தந்தை வீட்டை விட்டு வெளியேறி மாயமாகியுள்ளார்.

வீட்டில் எவரும் இல்லாத வேளைகளில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அவரது வளர்ப்பு தந்தை இரையாக்கியுள்ளார்.

மேலும் சில நாட்களில் குறித்த 9 வயது சிறுமியை 10 முறை வரை பாலியல் வன்புணர்வுக்கு நிர்பந்தித்து உட்படுத்தியுள்ளார்.

தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதால் கருவை கலைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியை இந்த நிலைக்கு தள்ளிய குறித்த நபர் மீது புகார் அளித்துள்ள தாயார், கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தங்களது இந்த சட்ட போராட்டம் மற்றும் சிறுமியின் செலவினங்களுக்காக பண உதவி செய்யவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபருக்கு உரிய தண்டனை பெற்றுத்தர ஆவன மேற்கொள்ளப்படும் என பெரு நாட்டின் பெண்கள் நல அமைச்சர் ஆனா மரியா உறுதி அளித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்