மனிதக்கறி விற்பனை செய்யும் ஹோட்டல் இருப்பது உண்மையா? வெளியான உண்மை தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
530Shares
530Shares
lankasrimarket.com

ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்றில் மனிதக் கறி விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்தி தற்போது கட்டுக்கதை என தெரியவந்துள்ளது.

ஜப்பான் அரசு மனித கறி விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அங்குள்ள உணவகம் ஒன்றில் மனிதக்கறி விற்பனை செய்ப்படுவதாக செய்திகள் வெளியானதால், இந்த தகவல் வைரலாக பரவியது.

மனித கறியில் செய்யப்பட்ட உணவுகள் பல விலைகளில் கிடைப்பதாகவும் 100 டொலரில் இருந்து 1193 டொலர் வரை உணவுகள் கிடைப்பதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே வாங்கி சமைக்கப்படுவதாகவும், அதில் ஒரு உடலை 35,799 டொலர் கொடுத்து வாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை சாப்பிட்ட சிலர் பன்றி கறி போலவே இருப்பதால் மனித கறியில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில் இவை அனைத்துமே தற்போது கற்பனை என தெரியவந்துள்ளது.

அதாவது ஜூலை 2016-ஆம் ஆண்டு ஒரு ஸ்பானிஷ் நையாண்டி தினசரி தளம் ஒன்று சாப்பாட்டு சகோதர்கள் என்ற ஒரு செய்தியை வெளியிட்டது.

நவம்பர் 2017 இதனை பல இணையதளங்கள் வெளியிட்டன. அதன் பின் மெக்சிகன் செய்திதளம் ஒன்று , 29 நவம்பர் 2017 அன்று கதையை போலியானது என கூறி உள்ளது.

இதன் மூலம், உலகிலேயே முதல்முறையாக சட்டத்துக்கு உட்பட்டு மனித கறி விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் கட்டுக்கதை என்பது தெரியவந்து உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்