பனிப்பொழிவால் கீழே விழுந்த குழந்தையை எட்டி உதைத்த தந்தை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
1161Shares
1161Shares
lankasrimarket.com

பனிப்பொழிவால் தள்ளாடி கீழே விழுந்த குழந்தை எழுந்திருக்க முடியாமல் கிடப்பதை பார்த்த தந்தை, அக்குழந்தையை காலால் எட்டி உதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kyrgyzstan நாட்டின் Bishkek நகரில் தந்தை ஒருவர் தனது மகனுடன் பனிப்பொழிவை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார்.

சுமார் 2 வயது மதிக்கத்தக்க அந்த குழந்தை பனிப்பொழிவால் கால்கள் தடுமாறி கீழே விழுந்துள்ளது. கீழே விழந்த அக்குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை, இதனைப்பார்த்த தந்தை தனது காலால் எட்டி உதைத்துள்ளார்.

இருப்பினும் அக்குழந்தை தட்டுத்தடுமாறி எழுந்துள்ளது, அதன்பின்னர், தனது கைகளால் குழந்தையை இழுத்துக்கொண்டே தந்தை சென்றுள்ளார், தந்தை எட்டி உதைத்ததில் பாதிப்படைந்த குழந்தை தள்ளாடியபடியே தந்தையுடன் செல்கிறது. இதனை அங்கிருந்த நபர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்