ஜப்பானை துவம்சம் செய்யவிருக்கும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஆபத்தான சுனாமி: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
365Shares
365Shares
lankasrimarket.com

ஜப்பானை தலை கீழாக புரட்டிப்போடும் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் மிக ஆபத்தான சுனாமி பேரலைகள் தாக்க இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 30 ஆண்டுகளில் ஜப்பானை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்க உள்ளதாகவும்,

இது வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அளவில் இருக்கும் எனவும், அதைத் தொடர்ந்து ஏற்படும் சுனாமி பேரலைகள் பெரும் நாசத்தை விளைவிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 8.8 ரிக்டர் அளவுக்கு மேலாக இருக்கும் எனவும் இது ஹொக்கிடோ தீவின் கிழக்கு கடற்கரை பகுதில் உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும்,

பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு புதிய உத்திகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அதுவரை ஜப்பானில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான ஒன்றாக கருதப்பட்டது.

அதனையடுத்து ஏற்பட்ட சுனாமி பேரலையானது 130 அடி உயரத்தில் எழுந்து சுமார் 10 கி.மீ கரைப்பகுதியை தாக்கியது. இதில் சுமார் 20,000 மக்கள் உயிரிழக்கவும் மாயமாகவும் செய்தனர்.

ஆனால் ஹொக்கிடோ தீவின் கிழக்கு கடற்கரை பகுதில் உருவாக சாத்தியமுள்ள இந்த நிலநடுக்கமானது அதிக பேரிழப்பை உருவாக்கும் எனவும், இது 340 முதல் 380 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கும் நிலநடுக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்