262 அடி உயரத்திலிருந்து கடலில் விழுந்த பேருந்து: 48 பயணிகள் உயிரிழந்த சோகம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
577Shares
577Shares
lankasrimarket.com

பெரு-வில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து கடலில் விழுந்ததில் 48 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

நாட்டின் தலைநகரம் லிமா நோக்கி நேற்றிரவு பேருந்து ஒன்று மலைப்பாதையில் 57 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.

அப்போது எதிரில் வந்த ஒரு டிராக்டருடன் பேருந்து மோதியதில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து 262 அடி உயரத்திலிருந்து அருகிலிருந்த கடலில் விழுந்தது.

இந்த சம்பவத்தில் 48 பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில் ஆறு பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் இறந்தவர்களின் சடலங்களை பெரும் போராட்டத்துக்கு பின்னர் கைப்பற்றினார்கள்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மூன்று பயணிகள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களின் நிலை என்னவென தெரியவில்லை.

நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ பப்லோ விடுத்துள்ள அறிக்கையில், இந்தளவு ஒரு பெரிய விபத்து நாட்டில் ஏற்பட்டது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இரண்டு வாகனங்கள் அதி வேகத்தில் வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தை பயன்படுத்தி பயணிகளின் உடமைகளை திருட முயன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெருவில் சாலை விபத்து காரணமாக கடந்தாண்டு 2600 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்