களவு போன உலகின் மிக விலை உயர்ந்த மது போத்தல்: விலை என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
257Shares
257Shares
lankasrimarket.com

டென்மார்க்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இருந்து உலகின் மிக விலை உயர்ந்த ஓட்கா மது போத்தல் ஒன்று களவு போயுள்ளது.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் அமைந்துள்ள கஃபே 33 என்ற பிரபல மதுபான விடுதியில் ஓட்கா மது போத்தல்களின் சிறப்பு கண்காட்சி நடைபெற்றுள்ளது.

இதில் பங்குபெற்ற உலகின் மிக விலை உயர்ந்த ஓட்கா மது போத்தல் ஒன்று விஷமிகளால் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

களவு போன மது போத்தலின் மதிப்பு சுமார் 1.3 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியால் இழைக்கப்பட்ட குறித்த மது போத்தலை ரஷ்யாவில் இருந்து வரவழைத்திருந்ததாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கில் உள்ள சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் குறித்த மது போத்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த மது போத்தலுக்கு காப்பீடு எதுவும் செய்யப்படாத நிலையில், மர்ம நபர் திட்டமிட்டே கொள்ளை இட்டு சென்றுள்ளதாக மதுபான விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கலவு போன போத்தல் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவினால் உரிய சன்மானம் வழங்கப்படும் என கஃபே 33 உரிமையாளர் Brian Engberg தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்