வடகொரிய தலைவர் கட்டிய நீர்நிலை பூங்கா: குளத்தில் குளிக்க எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
269Shares
269Shares
lankasrimarket.com

வடகொரியாவில் அமைந்துள்ள நிர்நிலை பூங்காவில் உள்ள நீச்சல் குளங்கள் மற்றும் அதன் கட்டண விபரங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

நாட்டின் தலைநகர் பியொங்யாங்கில் அமைந்துள்ளது முன்சு நீர்நிலை பூங்கா. இங்கு நீச்சல் குளங்கள், அருவிகள், பேக்கரி, சலூன், மதுக்கூடம் போன்ற விடயங்கள் அமைந்துள்ளன.

பூங்கா உள்ளே நான்கு மணி நேரம் இருக்க £7 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வடகொரிய குடிமகனின் சராசரி வார வருமானம் £24 ஆக உள்ள நிலையில் இந்த கட்டணமானது அதிகமானதாகவே பார்க்கப்படுகிறது.

பூங்காவை நான்கு மணி நேரத்துக்குள் சுற்றி பார்க்க முடியாது என்பதால் இங்கு வருபவர்களுக்கு கூடுதல் கட்டணம் செலவாகவே வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக வசதி படைத்தவர்கள் மட்டுமே இங்கு அதிகளவில் வருகிறார்கள்.

நாட்டின் தலைவர் கிம் ஜாங் உத்தரவின் படி 37 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள்.

முன்சு பூங்காவுக்கு முதல் ஆண்டு 880,000 பேர் வருகை தந்த நிலையில், கடந்தாண்டின் ஆறு மாதங்களில் 100,000 மட்டுமே வருகை தந்தார்கள்.

பூங்காவில் சுதந்திரமாக இருக்க முடியாது, பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வருபவர்கள் உடன் எப்போதும் நடமாடியபடி இருப்பார்கள்.

இது குறித்து அரீல் ஷல்வ் கூறுகையில், முன்சு பூங்கா மிக சிறந்த சுற்றுலா தளமாகும், ஆனால் ஆடை மாற்றும் அறைகளில் கூட பாதுகாப்பு அதிகாரிகள் உடன் வருகிறார்கள்.

இது கொஞ்சம் சங்கடமாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்