வடகொரிய எல்லையில் ராணுவ டாங்கிகள் குவிப்பு: போருக்கு ஒத்திகையா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
431Shares
431Shares
lankasrimarket.com

வடகொரியா அடுத்த ஏவுகணை சோதனைக்கு தயாராவதாக வெளியான தகவலை அடுத்து தென் கொரிய ராணுவ டாங்கிகள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய எல்லையில் வழக்கத்துக்கு மாறாக திரளான ராணுவ வீரர்களும் அணுஆயுத குண்டுகளை தகர்க்கும் K-55 வகை சக்தி வாய்ந்த துப்பாக்கிகளும் குவிக்கப்பட்டுள்ளன.

திரளான ராணுவ டாங்கிகளின் அணி வகுப்பு தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள தென் கொரியா, இதுவெறும் வழக்கமான நடவடிக்கை மட்டுமே என தெரிவித்துள்ளது.

ஆனால் வடகொரியாவில் ஏவுகணை தளத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் அந்த நாடு அடுத்தகட்ட சோதனைக்கு தயாராவதாக தெரிய வந்துள்ளது.

அடுத்த வாரம் இரு நாடுகளின் உயர்மட்ட குழு நேரிடையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருந்த நிலையில் இந்த நகர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகள் பேச்சுவார்த்தைக்கு தயாராவது இதுவே முதல் முறை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்