ரஜினியின் பாபா முத்திரையை காட்டிய பிரதமர்: வைரலாகும் வீடியோ

Report Print Harishan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

தாய்லாந்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாட்டின் பிரதமரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்தின் பாங்காக்கில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்குபெறவிருந்த பிரதமர் பிரயுத் சனோச்சா-விடம் கேள்விகள் கேட்பதற்காக பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தனர்.

நாட்டில் சமீபகாலமாக நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்காக பத்திரிக்கையளர்கள் காத்திருந்த போது, வேகமாக விரைந்து வந்துள்ளார் பிரயுத்.

பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை கேட்க தொடங்கிய சில நொடிகளில், தன் உதவியாளரிடம் பிரயுத்தின் ஆள் உயர வடிவத்திலான அட்டையை கொண்டு வரச் சொல்லி, ’இது கிட்ட கேட்டுக்கோங்க’ என கூறியபடி வேகமாக நகர்ந்துள்ளார்.

அவரின் அந்த செயலை சற்றும் எதிர்பாராத பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து கூச்சலிட்டபோது, வேகமாக நடந்து சென்ற பிரயுத், பாபா முத்திரையை காட்டியபடி விழா அரங்கிற்குள் சென்றுள்ளார்.

அவரின் அந்த செயல் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக இந்தியாவின் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் முத்திரையாக பாபா முத்திரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்