எல்லா பெருமையும் இவரைத்தான் சேரும்: தென்கொரியா ஜனாதிபதி

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசத் தயார் என தென்கொரியா ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

வடகொரியா- தென் கொரியா நாடுகளுக்கிடையேயான உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இருதரப்பு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பான்முன்ஜோம் எனும் கிராமத்தில் நடந்தது.

இந்த சந்திப்பு இணக்கமாக நடைபெற்ற காரணத்தால் தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்குகிற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தனது நாட்டு அணியை அனுப்ப வடகொரியா முடிவுசெய்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு டிரம்ப், இந்த பேச்சுவார்த்தைக்கு தாம்தான் காரணம் என்று ட்வீட் செய்திருந்தார்.

அதை அமோதிக்கும் விதமாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே -இன் "கொரிய நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தைக்கான பெருமை அனைத்தும் ஜனாதிபதி டிரம்ப்பையே சேரும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வடகொரியா அறிவித்து இருப்பது மிகவும் விரும்பத்தக்கது. அதே நேரத்தில் வடகொரியா அணு ஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டுவராத வரையில், இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு விடாது.

அணு ஆயுதங்களை கைவிடுவது தான் கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான வழியாக இருக்க முடியும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் உச்சிமாநாடு நடத்தி சந்தித்துப் பேச திறந்த மனதுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தென் கொரிய ஜனாதிபதி அமெரிக்காவை பகைத்துகொள்ளாமலும், சர்வதேச பொருளாதார தடையை மீறிவிடாமலும் அதே நேரத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதிலும் உறுதிகாட்டுவது தெரிகிறது.

கொரிய நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையை வரவேற்றுள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம், "கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தையும், உறுதியற்றத் தன்மையையும் இந்த பேச்சுவார்த்தை குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்