நண்பனை வெட்டி கொல்ல நினைத்த நபர்: ஹீரோவாக வந்து காப்பாற்றி பன்றியின் பாசப் போராட்டம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவில் பன்றி ஒன்றை வெட்ட முயன்ற போது, மற்றொரு பன்றி உடனடியாக வந்து அதை தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் Chongqing மாகாணத்தில் உள்ள Banan மாவட்டத்தில் கடந்த 25 ஆம் திகதி இரண்டு பேர் பன்றி ஒன்றை வெட்ட நினைத்தனர்.

அப்போது பன்றியை வெட்டுவதற்கு ஏற்ற படி வைத்து வெட்ட முயற்சித்த போது, மற்றொரு பன்றி எங்கிருந்து தான் வந்தது என்று தெரியவில்லை, உடனடியாக குறித்த பன்றியின் காலில் சென்று முட்டி அந்த பன்றியை காப்பாற்றியது.

அதன் பின் உடனடியாக அவர்களை இரண்டுமே சேர்ந்து கடிக்க நினைத்தது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தனது நண்பனை காப்பாற்றிய போதும், அந்த நபர் மீண்டும் குறித்த பன்றிகளை வெட்டி விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்