கடும் பனிப்பொழிவால் தலைமுடி உறைந்துபோன சிறுவன்: தற்போது எப்படியிருக்கான் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவில் கடும் பனிப்பொழிவு நாளில் நடந்தே பாடசாலை சென்றதால் தலைமுடி பனியால் உறைந்துபோன சிறுவனுக்கு பொதுமக்களின் ஆதரவு பெருகி வருகிறது.

சீனாவில் கடும் குளிர் வாட்டியெடுக்கின்றது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் Wang Fuman என்ற 8 வயது ஏழைச் சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2.8 மைல் தூரம் கால் நடையாக பாடசாலை சென்றுள்ளான்.

உரிய பாதுகாப்பு இன்றி பொதுமக்கள் வெளியே செல்ல அஞ்சும் அந்த காலை வேளையில் சிறுவன் Wang Fuman குளிருக்காக ஒரு மேலாடை மட்டுமே அணிந்துகொண்டு பாடசாலை நோக்கி நடந்துள்ளான்.

இதனால் அவனது தலைமுடி மொத்தமும் பனியால் உறைந்துபோனது. மட்டுமின்றி உறைந்த பனியை அகற்றாமல் அப்படியே குறித்த சிறுவன் தேர்வுக்கு தயாராகியுள்ளான்.

குறித்த சிறுவனின் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் பலரும் பகிர்ந்து வைரலானது.

இந்த நிலையில் சீனாவில் உள்ள பிரபல தொண்டு நிறுவனம் சிறுவனுக்கு தேவையான உதவிகளை செய்து தர முன்வந்துள்ளது.

மட்டுமின்றி சிறுவன் பயிலும் பாடசாலையிலும் தேவையான வசதிகளை செய்து தரவும் உறுதி அளித்துள்ளனர்.

மேலும் குறித்த சிறுவனுக்கு உதவும் பொருட்டு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை பொதுமக்களிடம் இருந்து சுமார் 245,000 பவுண்ட்ஸ் திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்