ஆற்றைக் கடக்க பெண்களுக்கு தடை விதித்த நாடு: விசித்திர காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிரிக்க நாடான கானாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மாகாணம் ஒன்றில் மாதவிடாய் காலத்தில் பெண்களை அங்குள்ள ஆற்றைக் கடக்க தடை விதித்துள்ளனர்.

குறித்த தடையால் அவர்களின் பள்ளி காலத்தில் சுமார் 20 நாட்கள் குடியிருப்பில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி வாரத்தின் சொவ்வாய்க்கிழமைகளிலும் பெண்களை ஆற்றைக்கடக்க அனுமதிக்கப்படுவதில்லை.

Ofin நதியை கானா மக்கள் புனிதமாக கருதி வருகின்றனர். ஆனால் மூத்த குடிமக்களின் ஆச்சாரங்களுக்கு தற்கால பெண்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த கடவுள்கள் அதிக தடைவிதிக்கின்றனர் என Shamima Alhassan என்பவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேபாளத்தில் இதேப்போன்று மாதவிடாய் காலத்தில் குடியிருப்புக்கு வெளியே தங்க வைக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் நாகம் தீண்டி உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.

அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை தடை செய்திருந்தும் சில கிராம மக்கள் வாடிக்கையாகவே கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காலம் 21 வயதான இளம் பெண் ஒருவர் மாதவிடாய் காலத்தில் தனியாக குடிலமைத்து தங்க வைக்கப்பட்டிருந்தார்.

குளிரை சமாளிக்க அவர் குடிலுக்குள் நெருப்பு வளர்த்திருந்துள்ளார். அதில் இருந்து வெளியேறிய கரும்புகையால் மூச்சுத்திணறி அவர் இறந்துள்ளது அடுத்த நாள் தெரிய வந்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஆக்ஸ்டு மாதம் நேபாள அரசு புது சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. அதில் மாதவிடாய் காலத்தில் பெண்களை வெளியேற்றும் நபருக்கு 3000 நேபாள பணம் அபராதமாக விதிக்கப்படும் என்றனர். இருப்பினும் இந்துக்கள் அதிகமாக வாழும் நாட்டுகளில் வாடிக்கையாக இப்போதும் குறித்த நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்