வடகொரிய மலைப்பகுதியில் ஆள் நடமாட்டம்: செயற்கைக் கோள் படங்களில் வந்த தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தும் பகுதியில் சமீப காலமாக ஆள் நடமாட்டம் தெரிவதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும், வடகொரியா, தென் கொரியாவுடனான குளிர்கால ஒலிம்பிக் போட்டி குறித்த பேச்சுக்கு பின்னர் தன்னுடையை சோதனையை குறைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளும் புன்கீரீ மலைப்பகுதியில், சமீப காலமாக ஆட்கள் நடமாட்டம், வாகனங்கள் அடிக்கடி தென் படுவதாக செயற்கை கோள் படங்களில் தெரியவந்துள்ளது.

அங்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும், மணலை கொண்டு செல்வதற்கு லாரிகளும் செல்வது அதிகரித்து வருகிறது.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, வடகொரியா மீண்டும் தன்னுடைய அணு ஆயுத சோதனையை நடத்த புன்கீரீ மலை பகுதியை பயன்படுத்த உள்ளது போல் தெரிகிறது.

இதற்கு முன்னர் வடகொரியா நடத்திய 6 அணுகுண்டு சோதனைகளில் கடைசி 5 சோதனைகள் இங்கு தான் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்