கோயம்புத்தூரை சேர்ந்த சுருதி என்ற இளம்பெண் தனது அழகினை பயன்படுத்தி பல ஆண்களுக்கு வலைவீசி பலகோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் தனது கூட்டத்தினரோடு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், தனது தாய், தம்பி ஆகியோரின் உதவியோடு, ஜேர்மனியை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
திருமணம் செய்துகொள்வதாக உறுதிசெய்யப்பட்ட பின்னர், அவரிடம் இருந்து 41 லட்சம் பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றிவிட்டார்.
அவர் அளித்த புகாரில் பேரில், கடந்த 2 தினங்களுக்கு முன் ஸ்ருதி, அவரது தம்பி சுபாஷ், தாய் சித்ரா உள்பட 5 பேரை கோவையில் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், இதுபோல பலரிடம் பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, இவர் வெளிநாட் ஆண்களையே குறிவைத்துள்ளார். அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றிவரும் இசக்கிமுத்து என்பரிடம் இருந்தும் 3 லட்சம் பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றிவிட்டதாக, அவர் சைபர் கிரைம் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ஸ்ருதியின் சொத்துக்களை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ருதியின் பேஸ்புக்கில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட் வாலிபர்கள் தொடர்பில் உள்ளனர்.
இவர்களில் பலர், ஸ்ருதி தங்களை காதலிப்பதாக இன்னும் நம்பி கொண்டிருக்கிறார்கள். ஏமாற நிறைய பேர் காத்திருப்பதால் அதிர்ச்சியடைந்த பொலிசார் ஸ்ருதியின் பேஸ்புக் பக்கத்தை முடக்கியுள்ளனர்.