இப்படியொரு புகைப்படத்தால் உலகம் முழுவதும் பிரபலமான ஜோடி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

சீனாவில் எரிந்த வீட்டில் இருந்து செல்பி எடுத்துக்கொண்ட ஜோடியின் புகைப்படம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காகவலம் வருகின்றது.

புத்தாண்டு அன்று வெளியிட்ட இவர்களதுபுகைப்படம் இதுவரை 10 million hits அடித்துள்ளது.

Guangxi Zhuang Autonomousk மாகாணத்தில் வசித்து வரும் Zhong Cheng தனது காதலியுடன் சேர்ந்து நூடுல்ஸ்ஸ்ஹொட்டல் நடத்தி வருகிறார்.

இவர்கள், இருவரும் ஒன்றாக வசித்துவருகின்றனர். இவர்களது வீட்டில் இருந்து திடீரென தீப்பிடித்த வாடை அடித்துள்ளது, வேகமாகசென்று பார்த்தபோது, கழிவறையில் தீ பற்றி எரிந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும்போராடி, தீயை அணைத்துள்ளனர். இதனால் இவர்களது முகத்தில், கரும்புகை படிந்துள்ளது. இருப்பினும்இந்த தம்பதியினர் கரும்புகையுடன் செல்பி எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அதனை தங்களதுசமூகவலைதளத்தில் வெளியிட்டு எரிந்துகொண்டிருக்கும்வீட்டில் செல்பி என பதிவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம், சீனாவில் அதிகம்மக்களால் பகிரப்பட்டு, வரலாற்றில் இவர்கள் தான் வேடிக்கையான ஜோடி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தால், 10,000 yuan மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. தற்போது வேறு வீட்டிற்கு குடிபெயரவிருக்கிறோம் என Zhong Cheng தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்