பெரு கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரு நாட்டின் கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவாகியுள்ளது.

இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு 300 கி.மீ வரை இருக்கும் எனவும், ஆனால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் இதன் தாக்கம் இருக்காது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தை அடுத்து சேதங்கள் தொடர்பில் இதுவரை அதிகார்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்