லிபியாவில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 2 பேர் பலி: 129 பேர் படுகாயம்

Report Print Athavan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

லிபியா நாட்டில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்ததால் இருவர் பலியானதுடன் 120க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளது அங்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிபியாவின் பெங்காசி நகரில் இருக்கும் மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையையொட்டி வழக்கமான தொழுகை நடைபெற்றது. அப்போது அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததால் அந்த மசூதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இதில் இருவர் பலி ஆனதுடன் 129 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டோரை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

அந்த மசூதியின் அருகில் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் இருந்த ஒரு குண்டு, காலணிகள் கழற்றிவிடும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த ஒரு குண்டு என மொத்ததில் இரண்டு குண்டுகள் வெடித்ததாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் 24–ந் திகதி பெங்காசியில் உள்ள மற்றொரு மசூதியின் வெளியே இரட்டை கார் குண்டுகள் வெடித்து சுமார் 40 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்