குளிர்கால ஒலிம்பிக்: சர்ச்சையில் சிக்கிய வடகொரியா அழகிகள்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாவை சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒரே முகமூடியை அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா மற்றும் தென் கொரியா அணிகள் இணைந்து ஐஸ் ஹொக்கி போட்டியில் ஒரே அணியாக சுவிட்சர்லாந்துக்கு எதிராக மோதினர்.

இப்போட்டியின் போது வடகொரியா சார்பில் கலந்து கொண்டு Cheers Girls முகமூடி அணிந்திருந்தனர்.

அந்த புகைப்படத்தில் இருப்பது வடகொரியாவின் தற்போதைய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்னின் தாத்தாவும், முதல் தலைவருமான கிம் இல் சூங்காக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

இந்த போட்டிகளை வடகொரியா தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக தென்கொரிய பழமைவாத குழுக்கள் குற்றம்சாட்டியுள்ளன.

எனினும் முகமூடி அணிந்ததில் எந்தவொரு அர்த்தமும் இல்லை என்றும், அழகிய நபரின் புகைப்படம் அது எனவும் வடகொரியா விளக்கம் அளித்துள்ளதாக தென்கொரிய ஒருங்கிணைந்த அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்