39 ஆண்டுகளாக ஒரே பரிசை காதலர் தினத்தன்று மனைவிக்கு அளித்துவரும் கணவர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

மெக்ஸிகோவில் நபர் ஒருவர் தமது காதல் மனைவிக்கு 39 வருடங்களாக காதலர் தினத்தன்று ஒரே பரிசை வழங்கி வரும் சுவாரஸ்ய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மெக்ஸிகோவின் ஆல்புகெர்க்கி நகரில் குடியிருக்கும் ரான் என்பவரே கடந்த 39 ஆண்டுகளாக தமது மனைவி டொன்னாவுக்கு ஒரே பரிசை வழங்கி வருகிறார்.

இருப்பினும் தமது கணவரின் அன்புப்பரிசை மிகவும் எதிர்பார்ப்புடன் பெற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரான் முதன் முறையாக தமது மனைவியிடம் காதலர் தின பரிசு என்ன வேண்டும் என கேட்டபோது, அவர் உள்ளூர் கடை ஒன்றில் பிரபலமான இனிப்பு வகை ஒன்றை தெரிவித்துள்ளார்.

ரான் குறித்த கடைக்கு சென்று தமது மனைவி விரும்பிய அந்த இனிப்பு வகையில் ஒரு பெட்டி வாங்கியுள்ளார்.

அதில் அந்த கடை ஊழியர் சலுகை ஒன்றையும் ரானுக்கு அளித்துள்ளார். அதுவே கடந்த 39 ஆண்டுகளாக ஒரு பாரம்பரியம் போன்று தொடரச் செய்துள்ளது.

இனிப்பு வாங்கிய பெட்டியை அடுத்த காதலர் தினத்துக்கு முன்னர் அதே கடையில் திரும்ப கொண்டு சென்றால் சலுகை விலையில் மீண்டும் அதே இனிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்த காதலர் தினத்தில் தமது ஆசை மனைவிக்கு பரிசளிக்க, அவருக்கு பிடித்தமான dark chocolate creams இனிப்பு வகையினை ரான் 39-வது முறையாக அதே பெட்டியில் நிரப்பி வைத்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு டொன்னாவுக்கு டிமென்ஷியா நோய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிமென்ஷியா நோய் தாக்கத்தில் தமது மனைவிக்கு தம்மை அடையாளம் தெரியவில்லை என கூறிய அந்த நாளே தனது வாழ்க்கையில் மிகவும் மோசமான நாள் என ரான் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ரான் அதே இனிப்பு பெட்டியுடன் தமது மனைவியை சந்தித்து வருகிறார்.

இந்த ஆண்டும் அது தொடரும் என ரான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்