காதலனை துண்டு துண்டாக வெட்டிய காதலி: திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
432Shares
432Shares
lankasrimarket.com

ரஷ்யாவில் சாத்தான் வழிபாட்டில் ஈடுபட்டு வந்த இளம்பெண் ஒருவர் தமது காதலனை கொன்று உடலை வெட்டி நொறுக்கியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரஷ்யாவில் 24 வயது இளைஞர் ஒருவரின் வெட்டி நொறுக்கப்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் சாத்தான் வழிபாட்டில் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கைதான 21 வயது மாணவி Anastasia Onegina, தாம் கொலை செய்யவில்லை எனவும், ஆனால் தமது காதலனின் உடலை வெட்டி நொறுக்கியதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

தமது காதலனான Dmitry Sinkevich சடலத்தைக் கண்டதாகவும், இதன் விசாரணை தம் மீது திரும்பும் என பயந்ததாகவும், அதனாலையே உடலை மறைவு செய்ய வெட்டி நொறுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருவரும் எல்லை மீறிய பாலியல் விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அதிலேயே பொலிஸ் அதிகாரியான Dmitry இறந்ததாகவும் உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மட்டுமின்றி அக்கம்பக்கத்தினரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். குறித்த ஜோடி சாத்தான் வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் எனவும், வாரந்தோறும் குழுவாக இணைந்து பாலியல் விளையாட்டில் ஈடுபட்டு வந்ததையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்